/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொற்பந்தலில் ராணுவ ஹெலிகாப்டர் இயந்திர கோளாறால் தரை இற க்கம்
/
பொற்பந்தலில் ராணுவ ஹெலிகாப்டர் இயந்திர கோளாறால் தரை இற க்கம்
பொற்பந்தலில் ராணுவ ஹெலிகாப்டர் இயந்திர கோளாறால் தரை இற க்கம்
பொற்பந்தலில் ராணுவ ஹெலிகாப்டர் இயந்திர கோளாறால் தரை இற க்கம்
ADDED : செப் 09, 2024 11:30 PM

உத்திரமேரூர் : காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே, பொற்பந்தலில், இயந்திர கோளாறால், விவசாய நிலத்தில் தரை இறங்கியது ராணுவ ஹெலிகாப்டர்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான 'இசட்ஏ 930' என்ற ஹெலிகாப்டர், தாம்பரத்தில் இருந்து, பயிற்சிக்காக புறப்பட்டு நேற்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, பிற்பகல் 12:00 மணியளவில் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் பகுதி வயல்வெளியில், அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதில், ஹெலிகாப்டரில் பயணித்த பயிற்சியாளர்கள், கேப்டன் சஞ்சிவ் மற்றும் நீரஜ் ஆகிய இரண்டு விமானிகளும் காயமின்றி பத்திரமாக தரையிறங்கினர்.
இதையடுத்து, தாம்பரம் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 'இசட் 1844 என்ற ஹெலிகாப்டர், பொற்பந்தல் பகுதிக்கு வர வைக்கப்பட்டது.
அதில் வந்த 5 ஊழியர்கள் ஹெலிகாப்டர் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு, மூன்று மணி நேரத்திற்கு பின் பொற்பந்தல் பகுதி வயல்வெளியில் இருந்து, இரண்டு ஹெலிகாப்டர்களும் புறப்பட்டு சென்றன.
பொற்பந்தல் பகுதியில் திடீரென இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே, கடந்த மாதம் ஜூலை 31ம் தேதி, இதேபோன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இயந்திர கோளாறால் சாலவாக்கத்தில் தரை இறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.