/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டி.ஆர்.பாலுவுக்கு பதிலாக நன்றி தெரிவித்த அமைச்சர்
/
டி.ஆர்.பாலுவுக்கு பதிலாக நன்றி தெரிவித்த அமைச்சர்
ADDED : ஜூன் 18, 2024 10:31 PM
குன்றத்துார்:முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழா மற்றும் லோக்சபா தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதற்கான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், குன்றத்துாரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
குன்றத்துார் பகுதி, ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்டது. இந்த தொகுதியில் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
அவருக்கு பதிலாக, சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அமைச்சர் பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறுகையில், ''விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை என அ.தி.மு.க., கூறியுள்ளது.
''இடைத்தேர்தலில் அ.தி.மு.க., பின் வாங்குகிறது என்றால், இயக்கத்தை வழி நடத்துவதற்கு, பழனிசாமி தகுதியான தலைவர் இல்லை என்பதையே, அவரது நடவடிக்கை உணர்த்துகிறது,'' என்றார்.
ஆனால், ''டி.ஆர்.பாலு வெற்றி பெற்றுவிட்டால், தொகுதியில் தலைக்காட்டமாட்டார்' என, சொந்த கட்சியினரே குற்றம்சாட்டும்நிலையில், அதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்,'' என்று அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.