/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அமைச்சர் குறைதீர் கூட்டம் தொடர்ந்து ரத்து
/
அமைச்சர் குறைதீர் கூட்டம் தொடர்ந்து ரத்து
ADDED : ஜூலை 02, 2024 10:55 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர் வளாக கூட்டரங்கில், திங்கட்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கலெக்டரின் குறைதீர் கூட்டம் போலவே, ஒரு ஆண்டுக்கு முன்பாக, அமைச்சர் அன்பரசன், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று குறைகேட்பு கூட்டம் நடத்தி, அவரே நேரடியாக மனுக்களை பெற்று வந்தார்.
நாளடைவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இக்கூட்டத்திற்கு வருவது குறைந்ததால், பொது மக்களிடம் குறைகேட்பு கூட்டமாக மாறியது.
இதையடுத்து, இரு வாரங்களுக்கு ஒரு முறை இக்கூட்டம் நடந்தது. சில மாதங்கள் இக்கூட்டமே நடைபெறாமலும் போனது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் விதிமுறைகள் காரணமாக, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் அமைச்சர் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், ஜூன் மாதம் நடைபெறும் என, பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், ஜூன் மாதமும் இக்கூட்டம் நடைபெறவில்லை. சட்டசபை கூட்டத்தொடர் நடந்ததால், ஜூலை மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று இக்கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றும் இக்கூட்டம் நடத்தப்படவில்லை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிக்கு அமைச்சர் சென்று விட்டதாகவும், தேர்தல் முடிந்த பிறகே, குறைதீர் கூட்டம் நடைபெறும் என தி.மு.க., வட்டாரம் தெரிவிக்கிறது.