/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மியாவாக்கி' சிறு மரங்கள் மெட்ரோ பணிக்காக அகற்றம்; சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

ADDED : ஆக 27, 2024 12:54 AM

கோயம்பேடு : சென்னையின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கையாக, அ.தி.மு.க., ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் 'மியாவாக்கி' எனும் அடர்வனம் அமைக்கப்பட்டது.
நீர் நிலையோரம் மற்றும்அரசு புறம்போக்கு நிலத்தில், காலியாக உள்ள இடங்களில் பல லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், கடந்த 2021ம் ஆண்டு கோடம்பாக்கம் மண்டலம் கோயம்பேடுபூ சந்தை வளாகத்தில், 6,500 சதுர அடி நிலப்பரப்பில், 1,700 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தற்போது, கோயம்பேடு சந்தை சுற்றுச்சுவரை ஒட்டிய காளியம்மன் கோவில் சாலையில், மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் நடக்கின்றன.
இதற்காக, அடர்வனத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட சிறு மரங்கள்அகற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் துாண்கள் அமைக்க இந்த சிறு மரங்கள் அகற்றப்பட்டதாக அங்காடி நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.