/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் மோட்ச தீபம்
/
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் மோட்ச தீபம்
ADDED : ஆக 07, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், உறவினர்களுக்கு இறைவன் மனோ தைரியத்தையும், ஆரோக்கியத்தையும் தரவேண்டியும், மீண்டும் இது போன்ற இயற்கை சீற்றம் நடைபெறாமல் இருக்க வேண்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரம் திருமுறை அமைப்பு சார்பில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
இதில், பெருநகர் ஒதுவார் சிவ. பிரம்மபுரிஸ்வரர் மோட்சதீபம் ஏற்றினார். இதில், ஏகம்பம் திருமுறை அமைப்பு மன்ற அமைப்பாளர் ரேணுகா மற்றும் திரளான சிவனடியார்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.