/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போலி விளம்பரத்தால் பணம் 'ஸ்வாகா'
/
போலி விளம்பரத்தால் பணம் 'ஸ்வாகா'
ADDED : மே 24, 2024 10:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம்; ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வினோத், 43; கூலி தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சினி, 38; பள்ளியில் உதவியாளர்.
வினோத், தன் மொபைல் போனில் சமூக வலைதளமான முகநுால் பார்த்துக் கொண்டிருந்தார். அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன், '500 ரூபாய் மந்திரம் நோட்டைத் தொட்டு வெற்றி பெறுங்கள்; 5,000 ரூபாய் 'கேஷ் பேக்' பெறுங்கள்' என்ற வாசகம் அடங்கிய பதிவு வந்தது.
அந்த பதிவை, அவர் தொட்டுள்ளார். இதையடுத்து, அவரது வங்கி கணக்கில் இருந்த 4,650 ரூபாய் பறிபோனது. இது குறித்து அவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.