/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
10 மாதங்களில் ஒருமுறை மட்டுமே கூடிய கண்காணிப்பு குழு கூட்டம்
/
10 மாதங்களில் ஒருமுறை மட்டுமே கூடிய கண்காணிப்பு குழு கூட்டம்
10 மாதங்களில் ஒருமுறை மட்டுமே கூடிய கண்காணிப்பு குழு கூட்டம்
10 மாதங்களில் ஒருமுறை மட்டுமே கூடிய கண்காணிப்பு குழு கூட்டம்
ADDED : மார் 09, 2025 03:15 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல் படுத்தப்படும் திட்டங்கள்பற்றி ஆய்வு செய்ய, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், மூன்று மாதங்களுக்குஒரு முறை நடத்தப்பட வேண்டும்.
இக்குழுவிற்கு, ஸ்ரீபெரும் புதுார் தி.மு.க.,- - எம்.பி., பாலு தலைவராக உள்ளார். அனைத்து துறையிலும், மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முன்னேற்ற அறிக்கை பற்றி கேள்விகள் எழுப்பப்படும். இக்கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பும் எம்.பி., - டி.ஆர்.பாலு, சரமாரி கேள்வி எழுப்புவார். இதனால், அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்திற்கு தயங்கியபடியே வருவர்.
ஆனால், இக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரிவர நடைபெறாமல் உள்ளது. லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த ஜூன் 2024க்கு பின், அடுத்த மூன்றாவது மாதத்தில் இக்கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், ஆறு மாதங்கள் கழித்து, டிசம்பரில் தான் இக்கூட்டம் நடந்தது. மழை, வெள்ளம் உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளி போனதாக அதிகாரிகள் சமாளித்தனர்.
டிசம்பர் மாதத்திற்கு பின், மூன்று மாதங்கள் ஆன நிலையில் அடுத்த கூட்டம் இன்னும் நடைபெறாமல் உள்ளது. எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு, 10 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை ஒரு முறை மட்டுமே இக் கூட்டம் நடந்துள்ளது.
கடந்த 10 மாதங்களில்மூன்று முறை நடத்தியிருக்க வேண்டிய இக்கூட்டம், கண்துடைப்பாக நடைபெறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. டிசம்பருக்கு பின் மார்ச் மாதமாவது இக்கூட்டம் நடக்குமா என, கேள்வி எழுந்துஉள்ளது.