/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் கூட்டமாக திரியும் குரங்குகள்
/
உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் கூட்டமாக திரியும் குரங்குகள்
உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் கூட்டமாக திரியும் குரங்குகள்
உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் கூட்டமாக திரியும் குரங்குகள்
ADDED : செப் 04, 2024 11:25 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம், குண்ணவாக்கம், கருவேப்பம்பூண்டி, மருதம், மதுார், நெல்வாய், சாலவாக்கம், திருமுக்கூடல் உள்ளிட்ட பல பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது.
இதனால், இப்பகுதியினர், தினசரி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கடைகளை மட்டுமே நோட்டமிட்டு, திண்பண்டங்களை துாக்கி சென்ற குரங்குகள், தற்போது வீடுகளில் புகுந்து அனைத்து உணவுப் பொருட்களையும் வாரி செல்வதாக கிராமத்தினர் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, குண்ணவாக்கம் கிராமத்தினர் கூறியதாவது,
குண்ணவாக்கம் மலை மற்றும் மருதம் காட்டு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட குரங்குகள் ஊரை சுற்றி வருகின்றன. தென்னை மரங்களில் இளநீர் பறித்து குடிப்பதோடு, மனிதர்கள் மீது வீசுகின்றன.
வீட்டு தோட்டங்களில் உள்ள மாமரம், கொய்யா, பப்பாளி மரங்களில் ஏறி பிஞ்சு, காய் என அத்தனையும் சேதப்படுத்துகின்றன.
வீட்டை திறந்து வைத்தால் உள்ளே ஆட்கள் இருந்தாலும், வீட்டிற்குள் புகுந்து எவ்வகை உணவுகள் உள்ளதோ அத்தனையும் துாக்கி செல்கின்றன.
முன்பெல்லாம் பட்டாசு சத்தம் கேட்டால் ஓடிய குரங்குகள் தற்போது அதற்கும் மசிவதில்லை.
எனவே, குண்ணவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், கூட்டம், கூட்டமாக வலம் வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.