/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் எருக்கஞ்செடி அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையோரம் எருக்கஞ்செடி அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 01, 2024 03:42 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையை ஒட்டியுள்ள சாலையின் இரு ஓரங்களிலும், போக்குவரத்துக்கு இடையூறாக எருக்கஞ்செடிகளும், கருவேலமரங்களின் கிளைகள் சாலை பக்கம் நீண்டு வளர்ந்துள்ளன.
கனரக வாகனத்திற்குவழிவிட சாலையோரம்ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கண்களில், எருக்கஞ்செடிகளின் பால்பட்டால், பார்வை பறிபோகும் அபாயநிலை உள்ளது.
சாலையோரம் உள்ள செடிகள் எதிரே வரும் வாகனங்களை மறைப்பபதால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக அல்லாபாத் ஏரிக்கரையில், சாலையின் இரு ஓரங்களிலும் வளர்ந்துள்ள எருக்கஞ்செடிகளையும், கருவேல மரங்களையும் வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.