/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 07, 2024 01:27 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திக்குன்றம் பிரதான சாலையின் குறுக்கே, மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது. இவ்வழியாக கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூர், பெரும்பாக்கம், குண்டுகுளம், விப்பேடு, விஷார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் உள்ள பாலத்திற்கு, ஒருபக்க தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட, சாலையோரம் ஒதுங்கும்போது, தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.