/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறந்தநிலை மழைநீர் வடிகால்வாய் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
திறந்தநிலை மழைநீர் வடிகால்வாய் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
திறந்தநிலை மழைநீர் வடிகால்வாய் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
திறந்தநிலை மழைநீர் வடிகால்வாய் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 11, 2024 12:20 AM

ஸ்ரீபெரும்புதுார்:வல்லம்கண்டிகை சாலையில் மழைநீர் வடிகால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல்உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றி யம், வல்லம்கண்டிகை வழியே, வல்லம் சிப்காட் தொழிற்பூங்காவில் இயங்கிவரும் தொழிற் சாலைகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன.
தவிர, மேட்டுப்பாளையம், பண்ருட்டி பகுதிவாசிகள் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாகஉள்ளது.
இந்த சாலையோரம் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழைநீர் வடிகால்வாய், திறந்த நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்து நடக்கின்றன.
இரவு நேரங்களில் எதிர்வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், கட்டுப்பாட்டை இழந்து திறந்த நிலையில் உள்ள கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, திறந்த நிலையில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயில் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.