/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்வாங்கிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
உள்வாங்கிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : மே 07, 2024 11:30 PM

படப்பை:படப்பையில் உள்வாங்கிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வண்டலுார்-- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் படப்பை பஜார் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி, இரண்டு ஆண்டுகளாக மந்தகதியில் நடந்து வருகின்றன.
மேலும், இங்கு மழை காலத்தில் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலையில் குட்டை போல் தேங்கியதால் சாலை சேதமானது. இந்த சாலை மூன்று மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சாலை உள்வாங்கி சற்று பள்ளமாக உள்ளது. இந்த வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென பள்ளமாக காணப்படும் பகுதியில் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, படப்பையில் உள்வாங்கிய சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

