/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நத்தப்பேட்டை சாலையில் படர்ந்துள்ள முட்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி
/
நத்தப்பேட்டை சாலையில் படர்ந்துள்ள முட்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி
நத்தப்பேட்டை சாலையில் படர்ந்துள்ள முட்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி
நத்தப்பேட்டை சாலையில் படர்ந்துள்ள முட்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 18, 2024 12:14 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டை, தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் இருந்து திருவீதிபள்ளம், மகாலிங்கம் நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலையோரம் சீமை கருவேல மரங்கள் சாலை பக்கம் நீண்டு வளர்ந்துள்ளன.
கூர்மையான முட்கள் உள்ள இம்மரக்கிளைகள், இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது மரத்தின் முட்கள் பதம் பார்த்து விடுகிறது.
மேலும், இம்மரங்கள் எதிரே வரும் வாகனங்களை மறைத்து விடுவதால், மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், நத்தப்பேட்டை சாலையோரத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.