/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பல்லாங்குழியான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
/
பல்லாங்குழியான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 07, 2025 12:38 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலை வழியே, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் - - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் மிக முக்கிய சாலையாக உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைபாக்கம் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றி கொண்டு, தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், பல இடங்கள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. குறிப்பாக, வெங்காடு சந்திப்பில் சாலை பல்லாங்குழியாக மாறி, மோசமான நிலையில் உள்ளது.
இதனால், இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கு காயமடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர்,சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.