/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பால் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

ADDED : மே 24, 2024 05:09 PM

திருவள்ளூர்: சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில், அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை, சுற்றுலா பேருந்து என, தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் திருமழிசை அடுத்துள்ள தண்டலம் பகுதியில் சவீதா தனியார் கல்லுாரி மருத்துவமனை எதிரே உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோரம், ஊராட்சியில் சேகரமாகும் குப்பை மலைபோல் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த குப்பையை அகற்றாமல் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் புகையால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலையும் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி, நெடுஞ்சாலையோரம் ஏரியில் குப்பை கொட்டுவது மற்றும் எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.