/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாகலுத்துமேடு படவேட்டு அம்மனுக்கு கூழ்வார்த்தல்
/
நாகலுத்துமேடு படவேட்டு அம்மனுக்கு கூழ்வார்த்தல்
ADDED : ஆக 18, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம் நாகலுத்துமேடு அரசமர தெருவில், படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 54வது ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, வரும் 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்வும், 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டியும் நடைபெறுகிறது.
இதில், 25ம் தேதி, காலை 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கும்பம் படையலிட்டு, கூழ்வார்த்தலுடன் அம்மன் வர்ணிப்பு நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், ஊரணி பொங்கல் வைக்கப்பட்டு அம்மனுக்கு படையலிடப்படுகிறது.

