/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்புச்சுவரின்றி நத்தப்பேட்டை சிறுபாலம்
/
தடுப்புச்சுவரின்றி நத்தப்பேட்டை சிறுபாலம்
ADDED : ஆக 18, 2024 11:54 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி நத்தப்பேட்டை பிரதான சாலையில் இருந்து ரயில் நிலையம், முத்தியால்பேட்டை, களியனுார், வையாவூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலையின் குறுக்கே, மழை நீர் கால்வாய் செல்லும் இடத்தில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, சிறுபாலத்தை ஒட்டியுள்ள கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, நத்தப்பேட்டை பிரதான சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்திஉள்ளனர்.