sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்ச் 9ல் புதிய தேர் வெள்ளோட்டம்

/

கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்ச் 9ல் புதிய தேர் வெள்ளோட்டம்

கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்ச் 9ல் புதிய தேர் வெள்ளோட்டம்

கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்ச் 9ல் புதிய தேர் வெள்ளோட்டம்


ADDED : மார் 05, 2025 01:12 AM

Google News

ADDED : மார் 05, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் அருகே கோவூரில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில், 1984ம் ஆண்டுக்கு முன் வரை, வைகாசி விசாகம் விழா, 10 நாட்கள் நடக்கும். இதன் ஏழாம் நாளில், தேரோட்டம் இருக்கும்.

பல நுாற்றாண்டுகளாக மிகப் பெரிய விழாவாக நடந்த தேர் திருவிழா, 40 ஆண்டுகளுக்கு முன், தேர் பழுதடைந்த காரணத்தால் நிறுத்தப்பட்டது. அதன்பின், தேர் மக்கி மண்ணோடு மண்ணாகி வீணாகியது.

இதையடுத்து, புதிய தேர் அமைத்து, மீண்டும் வைகாசி விசாகம் திருவிழாவை, 10 நாட்கள் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, குன்றத்துாரை சேர்ந்த அமைச்சர் அன்பரசன், தமிழக சட்டசபையில் ஹிந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது, கோவூர் கோவில் தேர் குறித்து கோரிக்கை வைத்தார்.

அதன்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவூர் கோவிலுக்கு புதிய தேர் செய்யப்படும் என, அறிவித்தார்.

இதையடுத்து, கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதி என, மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில், புதிய தேர் அமைக்கும் பணி, கடந்த 2023ல் துவங்கியது.

துாத்துக்குடியில் இருந்து கோவூருக்கு வேங்கை மரக்கட்டைகள் வரவழைக்கப்பட்டு, 42.5 அடி உயரம், 16 அடி அகலத்தில், ஐந்து அடுக்குகள் கொண்ட புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.

தேர் பணிகள் நிறைவுற்றதையடுத்து, வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு, கோவூரில் தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தேரின் வடிவமைப்பு


கோவூர் கோவில் தேரை வடிவமைத்த ஸ்தபதி கே.அருள் கூறியதாவது:நுாறு ஆண்டுகளுக்கு முன், கோவூர் கோவில் தேர் எப்படி இருந்ததோ, அதே வடிவில், சைவ ஆகம விதிப்படி புதிய தேரை அமைத்துள்ளோம்.ஐந்து அடுக்குகளை கொண்ட இந்த தேரில், சுவாமி பீடம் அமைந்துள்ள மூன்று அடுக்குகளில், குதிரை, யாளி, பூதகணங்கள், மிதுன சிற்பங்கள், மனிதன், அரசர்கள் என, 320 பொம்மைகளும், 52 துாண்களும் செதுக்கப்பட்டுள்ளன.தேரை எளிதாக இயக்கும் வகையில், திருச்சியில் உள்ள பிரபல நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 6 இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கும்பகோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யக மணிகள், தேரைச் சுற்றி கட்டப்பட்டுள்ளன. தேரில் பஞ்சவர்ணம் தீட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us