/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாத்தணஞ்சேரியில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம்
/
சாத்தணஞ்சேரியில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம்
ADDED : பிப் 28, 2025 02:10 AM

அரும்புலியூர்,:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சியில் கரும்பாக்கம், பேரணக்காவூர், காவணிப்பாக்கம், சீத்தாவரம், மாம்பாக்கம் மற்றும் அரும்புலியூர் ஆகிய கிராமங்கள் உள்ளன.
அரும்புலியூரில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் ஊராட்சிமன்ற அலுவலகம் இயங்கி வந்தது.
இக்கட்டடம் மிகவும் சேதமானதையடுத்து புதிய கட்டடம் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, அரும்புலியூரில் புதியதாக ஊராட்சி அலுவலகம் கட்ட கனிமவள நிதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதேபோல், சாத்தணஞ்சேரி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 32 லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடப் பணி துவக்கப்பட்டு பணி முடியும் நிலையில் உள்ளது.

