/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'புதிய ஷேர் ஆட்டோக்களுக்கு இனிமேல் அனுமதி கிடையாது'
/
'புதிய ஷேர் ஆட்டோக்களுக்கு இனிமேல் அனுமதி கிடையாது'
'புதிய ஷேர் ஆட்டோக்களுக்கு இனிமேல் அனுமதி கிடையாது'
'புதிய ஷேர் ஆட்டோக்களுக்கு இனிமேல் அனுமதி கிடையாது'
ADDED : செப் 14, 2024 12:29 AM
காஞ்சிபுரம், :காஞ்சிபுரத்தில், ஆட்டோஓட்டுனர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம், காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் தலைமையில் நேற்று நடந்தது. போலீஸ் இன்பெக்டர்கள் சங்கர சுப்பிரமணியன், ஜெயவேல், போக்குவரத்து ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், காஞ்சிபுரம்வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
ஆட்டோ டிரைவர்களுக்கு பலமுறை எச்சரித்தும், போக்குவரத்துக்கு இடையூறாகவே நிறுத்துவது வருத்தம் அளிக்கிறது. இனி வரும் காலங்களில் மூன்று முறை மட்டும் மன்னிப்பு வழங்கப்படும்.
நான்காவது முறை சம்பந்தப்பட்ட ஆட்டோ உரிமையாளரிடம் அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்களில் ஒரு டிரைவர் உட்பட 4 பேரும், ஷேர் ஆட்டோக்களாக இருந்தால், ஒருடிரைவர் உட்பட மொத்தம் 5 பேர் தான் இருக்க வேண்டும்.
காஞ்சிபுரம் பெருநகராட்சியாக மாறி விட்டதால், புதிய ஷேர் ஆட்டோக்களுக்கு இனிமேல் அனுமதியில்லை. இனி வரும் காலங்களில் காவல்துறையும், வட்டார போக்குவரத்துத் துறையும் இணைந்து, அடிக்கடி கூட்டாய்வு செய்து விதிமீறும் ஆட்டோக்களின் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், போக்கு வரத்து உதவி ஆய்வாளர்கள் ராஜு, ரவி மற்றும் ஆட்டோஓட்டுனர்கள் பங்கேற்றனர்.