/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துார்ந்த வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
துார்ந்த வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 20, 2025 12:45 AM

உத்திரமேரூர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, பாவோடும் தோப்பு தெருவில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆகியவை வெளியேற வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
இந்த வடிகால்வாய் தற்போது முறையாக பராமரிப்பு இல்லாமலும், மண்ணால் தூர்ந்தும் உள்ளன. இதனால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது வடிகால்வாயில் தேங்கி நிற்கிறது.
அவ்வாறு, தேங்கி நிற்கும் கழிவுநீரில் தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மண்ணால் தூர்ந்துள்ள வடிகால்வாயை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.