/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை மீடியனில் முட்செடிகள் அகற்றம்
/
சாலை மீடியனில் முட்செடிகள் அகற்றம்
ADDED : ஆக 20, 2024 11:25 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள், பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில், சாலையின் மீடியனில் கருவேல முட்செடிகள் மற்றும் களைசெடிகள் சாலை பக்கம் நீண்டு வளர்ந்து இருந்தன.
இதனால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முட்செடிகள் இடையூறு ஏற்படுத்தி வந்தது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக மீடியனில் வளர்ந்திருந்த முட்செடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, மீடியனில் வளர்ந்திருந்த முட்செடிகள் மற்றும் தேவையற்ற களைசெடிகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நேற்று அகற்றினர்.

