/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழுதடைந்த கட்டடத்தில் நுாலகம் பழையசீவரத்தில் 'திக்... திக்'
/
பழுதடைந்த கட்டடத்தில் நுாலகம் பழையசீவரத்தில் 'திக்... திக்'
பழுதடைந்த கட்டடத்தில் நுாலகம் பழையசீவரத்தில் 'திக்... திக்'
பழுதடைந்த கட்டடத்தில் நுாலகம் பழையசீவரத்தில் 'திக்... திக்'
ADDED : ஜூலை 06, 2024 12:26 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில் கிளை நுாலகம் செயல்படுகிறது. இந்த நுாலகத்தில், பழையசீவரம், சங்கராபுரம், லிங்காபுரம், வரதாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இப்பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், இந்த நுாலகத்திற்கு வந்து தங்களது வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர்.
கடந்த 1966ம் ஆண்டு கட்டப்பட்ட நுாலகம், தற்போது மிகவும் பழுதடைந்து இருப்பதோடு, போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடியில் இயங்குகிறது.
எனவே, ஆபத்தான நுாலக கட்டடத்தை அகற்றி, புதிதாக அமைக்க பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பழையசீவரம் கிளை நுாலக ஊழியர் கூறியதாவது:
பழையசீவரம் கிளை நுாலகத்தில், 32,000 புத்தகங்கள் உள்ளன. நுாலகத்திற்கான கட்டடம் சேதமடைந்து, மழைக்காலத்தில் மேல்தளத்தின் வழியாக மழைநீர் சொட்டுகிறது.
அச்சமயம் புத்தகங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நுாலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே, பழையசீவரத்தில் பழுதடைந்த கிளை நுாலகத்திற்கான கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.