/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'நர்சரி' உரிமையாளர் வெட்டிக் கொலை
/
'நர்சரி' உரிமையாளர் வெட்டிக் கொலை
ADDED : ஏப் 01, 2024 02:03 AM
குன்றத்துார்:குன்றத்துார் அருகே பூந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை, 70.
இவர், குன்றத்துார் - --ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், நந்தம்பாக்கம் அருகே நர்சரி கார்டன் எனும் அழகு செடிகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, நர்சரி கார்டனில் தங்கதுரை துாங்கி உள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை இவரது மகன் நர்சரி கார்டனுக்குச் சென்ற போது, தங்கதுரை தலையில் மூன்று இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், குன்றத்துார் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தங்கதுரையின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். குற்றவாளிகள் பிடிபட்ட பிறகே, கொலைக்கான காரணம் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

