/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செங்கற்களால் இடையூறு ஒப்பந்ததாரர் முற்றுகை
/
செங்கற்களால் இடையூறு ஒப்பந்ததாரர் முற்றுகை
ADDED : ஜூன் 24, 2024 05:27 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு அரசு துவக்கப் பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
இதையொட்டி பள்ளி வளாகத்தில் மாணவியர் பயன்படுத்தும் கழிப்பறையை ஒட்டி செங்கல் பல அடுக்குளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், கழிப்பறைக்கு செல்லும் மாணவியர் மீது செங்கல் சரிந்து விழுந்தால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
கழிப்பறைக்கு செல்லும் வழியில் இடையூறாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள செங்கற்களை அகற்ற வேண்டும் என, இப்பள்ளியில் பயிலும் மாணவ- - மாணவியர் பெற்றோர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் கட்டுமானப் பணி ஒப்பந்தாரரை நேற்று முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர் கூறுகையில், ''கழிப்பறை அருகில், உயரம் அதிகம் உள்ள செங்கற்களை அப்புறப்படுத்திவிட்டு, அப்பகுதியில் தடுப்பு அமைக்கப்படும்,'' என்றார்.