/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் தாமதம்
/
குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் தாமதம்
ADDED : ஆக 27, 2024 12:49 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாதந்தோறும் இரண்டு செவ்வாய்க் கிழமைகளில், அமைச்சர் அன்பரசன் தலைமையில், குறைதீர் கூட்டம்நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில், உள்ளாட்சிபிரதிநிதிகள் மனு அளிப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களும் மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று, காலை 11:00 மணிக்கு, அமைச்சர் அன்பரசன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்என, மாவட்டநிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் அமைச்சர் குறைதீர் கூட்டம் ஆகிய கூட்டங்களுக்கு, அரசின்பல்வேறு துறை அதிகாரிகள் தாமத மாக வருவதாக புகார் எழுந்து உள்ளது.
கூட்டத்தில் முன் கூட்டியே வர வேண்டிய அதிகாரிகளே தாமதமாகவருவதாக மனு அளிக்க வருவோர் புகார் தெரிவிக்கின்றனர்.