/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி சிவாலயங்களில் வரும் 24ல் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா
/
காஞ்சி சிவாலயங்களில் வரும் 24ல் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா
காஞ்சி சிவாலயங்களில் வரும் 24ல் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா
காஞ்சி சிவாலயங்களில் வரும் 24ல் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா
UPDATED : மார் 22, 2024 12:41 PM
ADDED : மார் 22, 2024 12:41 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பல்வேறு சிவாலயங்களில் வரும் 24ல் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நடைபெறுகிறது.
சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்புறம் உள்ள சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள பாலகுஜாம்பாள் சமேத வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வரும் 24ல் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி, காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், தொடர்ந்து சிவபூஜை, சிவ கொடியேற்றுதல், திருவிளக்கு ஏற்றுதல் நடைபெறுகிறது. காலை 9:00 மணிக்கு திருவாசகமும், திருக்கோவையாரும், எம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
மாலை 6:00 மணிக்கு திருவாசகம் முற்றோதலும், 7:00 மணிக்கு பாலகுஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் பெருமானுக்கும் திருக்கல்யாணமும், தொடர்ந்த ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.
திருக்காலிமேடு சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவிலில் வரும் 24ல் காலை 10:00 மணிக்கு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காஞ்சிபுரம் சண்முகா நகர் விரிவு பகுதியில், கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தையொட்டி வரும் 24ல் காலை 10:00 மணிக்கு சிறப்பு மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு விஜயகணபதி கோவிலில் இருந்து அம்பாள் அழைப்பும், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:30 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது.

