/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடிபாடுகளில் சிக்கியவர் உயிரிழப்பு
/
இடிபாடுகளில் சிக்கியவர் உயிரிழப்பு
ADDED : பிப் 25, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அடுத்த மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 49; கூலித்தொழிலாளி. நேற்று காலை 10:30 மணிக்கு, அதே பகுதியில் இருக்கும் நெல் கொள்முதல் நிலைய தகர கொட்டகையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, எதிர்பாராத விதமாக தகர கொட்டகை சரிந்து, அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்ட பொன்னேரிக்கரை போலீசார், காஞ்சிபுரம் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
இருப்பினும், இறந்தவருக்கு உரிய இழப்பீடு மற்றும் நெல் கொள்முதல் நிலையம் நடத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவரது உறவினர்கள், காஞ்சிபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.