sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

* 100 நாள் வேலைக்கு ஒரு வார ஊதியமே விடுவிப்பு...ரூ.5.42 கோடி:* ரூ.65 கோடி பெற்றுத்தர ஆர்வம் காட்டாத அதிகாரிகள்

/

* 100 நாள் வேலைக்கு ஒரு வார ஊதியமே விடுவிப்பு...ரூ.5.42 கோடி:* ரூ.65 கோடி பெற்றுத்தர ஆர்வம் காட்டாத அதிகாரிகள்

* 100 நாள் வேலைக்கு ஒரு வார ஊதியமே விடுவிப்பு...ரூ.5.42 கோடி:* ரூ.65 கோடி பெற்றுத்தர ஆர்வம் காட்டாத அதிகாரிகள்

* 100 நாள் வேலைக்கு ஒரு வார ஊதியமே விடுவிப்பு...ரூ.5.42 கோடி:* ரூ.65 கோடி பெற்றுத்தர ஆர்வம் காட்டாத அதிகாரிகள்


ADDED : ஏப் 01, 2025 09:56 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 3 மாதத்திற்குரிய ஊதியமாக வழங்க வேண்டி, ஒதுக்கிய 65 கோடி ரூபாயில், ஒரு வாரத்திற்குரிய ஊதியமான, வெறும் 5.42 கோடி ரூபாய் மட்டும் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டுள்ளது. முழு தொகையையும், பெற்று தருவதில், ஊரக வளர்ச்சி துறையினர் முனைப்பு காட்டவில்லை என, நுாறுநாள் பணியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசின் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது.

இதில், 1.37 லட்சம் குடும்பங்களில், 1.68 லட்சம் பேர், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். இதில், 1.29 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.

வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரையில், தினசரி சராசரியாக 40,918 பேருக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.

மூன்று மாதங்களாக, 100 நாள் வேலை வாய்ப்புக்குரிய கூலி தொகை தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை அதன்படி, கூலி தொகையாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 65 கோடி ரூபாய் நிலுவை தொகை உள்ளது என, கூலித்தொழிலாளர்கள் புலம்பி வந்தனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் தமிழகம் முழுதும் இருக்கும், 100 நாள் கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் விடுவிக்கப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், 65 கோடி ரூபாய்க்கு, 5.42 கோடி ரூபாய் முதற்கட்டமாக 40 ஆயிரம் கூலி தொழிலாளர்களுக்கு கூலி தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், 100 நாள் பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்குரிய பணம் மட்டுமே கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டி 65 கோடி ரூபாயை, 100 நாள் கூலி தொழிலாளர்களுக்கு பெற்றுத்தர ஊரக வளர்ச்சி துறையினர் முனைப்பு காட்டவில்லை என, 100 நாள் பணியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டாரத்தைச் சேர்ந்த 100 நாள் தொழிலாளர்கள் கூறியதாவது:

எங்களுக்கு, தற்போது ஒரு வாரத்திற்குரிய பணம் மட்டுமே வந்துள்ளது. மீதமுள்ள நாட்களுக்குரிய பணம் வர வேண்டி உள்ளது. ஒரே நேரத்தில் மொத்த கூலி தொகை வந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம். மீதி எப்போது வரும் என, எதிர்பார்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும், 100 நாள் வேலைக்குரிய தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது. நமது மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டி 65 கோடி ரூபாயில், 5.42 கோடி ரூபாய் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள தொகை, ஒரிரு வாரத்திற்குள் விடுவிக்கப்படும் என, மாநில ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த தொகை வந்த பின், அனைவருக்கும் நிலுவை இன்றி கூலி தொகை அவரவர் வங்கி கணக்கில் கிடைத்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us