/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.45 லட்சம் செலவில் கோவூர் பஸ் நிலையம் திறப்பு
/
ரூ.45 லட்சம் செலவில் கோவூர் பஸ் நிலையம் திறப்பு
ADDED : ஆக 19, 2024 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:
குன்றத்துார் அருகே, கோவூர் ஊராட்சியில், மின் வாரியம் அலுவலகம் அருகே பேருந்து நிலையம் உள்ளது. இங்கு, 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கூரை, தரைதளம் அமைத்து புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து பேருந்து நிலையத்தை, அமைச்சர்கள் சிவசங்கர், அன்பரசன் ஆகியோர் நேற்று,ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்த விழாவின் போது கோவூர் -- கிளாம்பாக்கம், கோவூர் - - பிரேட்வே, போரூர் - - சோமங்கலம், போரூர் - - நந்தம்பாக்கம், கிண்டி - - பல்லாவரம் ஆகிய வழித்தடத்தில், புதிய பேருந்துகள் இயக்கத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

