/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையம் கரும்பாக்கத்தில் திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் கரும்பாக்கத்தில் திறப்பு
ADDED : ஆக 14, 2024 09:41 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், நடப்பாண்டு சொர்ணவாரி பட்டத்திற்கு, 8,800 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.
கதிர் முற்றிய பயிர்களை, சில நாட்களாக அறுவடை செய்து வருகின்றனர். இதனால் சொர்ணவாரி பட்டத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கம், அரும்புலியூர், சீத்தாவரம், களியப்பேட்டை ராஜம்பேட்டை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில், ஆழ்துளை கிணற்று பாசனம் வாயிலாக அதிக நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது, இப்பகுதி விவசாயிகள், நெல் அறுவடை பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதையடுத்து, இந்த கிராமங்களின் மைய பகுதியான கரும்பாக்கத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.
உத்திரமேரூர் தி.மு.க ., - எம்.எல்.ஏ., சுந்தர் கொள்முதல் நிலையத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்து, அங்கு விளைவிக்கும் நெல் ரக வகைகள் மற்றும் விவசாயிகளின் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் மற்றும் அப்பகுதி ஊராட்சி தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதேபோல, பினாயூர் கிராமத்திலும் நேற்று முன்தினம் நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.