/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையம் அரும்புலியூரில் திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் அரும்புலியூரில் திறப்பு
ADDED : ஆக 20, 2024 05:21 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ், 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரிநீர் பாசனத்தை கொண்டு, அரும்புலியூர், சீத்தாவரம், காவணிப்பாக்கம், கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 600 ஏக்கர்பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இப்பகுதியில், சொர்ணவாரி பட்டத்திற்கு சாகுபடி செய்த நெற் பயிர்கள் தற்போது அறுவடை செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அரும்புலியூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று அப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.