/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிற மாவட்ட தாசில்தார்கள் நியமிக்க எதிர்ப்பு
/
பிற மாவட்ட தாசில்தார்கள் நியமிக்க எதிர்ப்பு
ADDED : ஜூலை 22, 2024 01:34 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் மற்றும் சுற்றுவட்டார 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது.
இதற்கான நில எடுப்பு பணிகள் மேற்கொள்ள, 24 யூனிட்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலமும், ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் செயல்படுகிறது.
அதேசமயம், ஒவ்வொரு யூனிட்டிலும், ஒரு தாசில்தார், சர்வேயர் என, மொத்தம் 326 வருவாய் துறை ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
அந்தவகையில், தாசில்தார்களே 24 பேர் தேவைப்படுகின்றனர்.வேறு வழியில்லாமல், வெளி மாவட்டத்தில் இருந்து அதிகாரிகளை அழைக்கவேண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு, வருவாய் துறை அலுவலர்கள் சங்கமும், வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சங்கத்தினர், 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் துணை தாசில்தார்களாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.