/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆக்கிரமிப்பு, கழிவுநீர் குட்டையாக மாறிய ஒரகடம் குளம்
/
ஆக்கிரமிப்பு, கழிவுநீர் குட்டையாக மாறிய ஒரகடம் குளம்
ஆக்கிரமிப்பு, கழிவுநீர் குட்டையாக மாறிய ஒரகடம் குளம்
ஆக்கிரமிப்பு, கழிவுநீர் குட்டையாக மாறிய ஒரகடம் குளம்
ADDED : மே 09, 2024 12:15 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், படப்பை அடுத்த, சென்னக்குப்பம் ஊராட்சி, ஒரகடம் சந்திப்பில், மேம்பாலத்தின் கீழ் குளம் உள்ளது. இந்த குளம், 20 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது.
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்த பின், அப்பகுதியில் கடைகள் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்தன. அதன்பின், குளம் பராமரிப்பின்றி போனது.
குளத்தை சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலந்து நீர் மாசடைந்தது.
மேலும், குளத்தின் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், குளத்தின் பரப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
எனவே, இக்குளத்தை துார்வாரி, சுற்றுசுவர் அமைத்து, சீரமைக்க, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிகை விடுத்துள்ளனர்.