/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அழுகிய நிலையில் பெயின்டர் சடலம் மீட்பு
/
அழுகிய நிலையில் பெயின்டர் சடலம் மீட்பு
ADDED : மார் 01, 2025 12:00 AM
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தோப்புத் தெருவில் லட்சுமணன், 70. என்பவர், வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
பெயின்டர் தொழில் செய்து வந்த இவர், தனியாக வசித்து வந்துள்ளார். ஏற்கனவே, உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார்.
இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். மூன்று நாட்களாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. அவரது மகள் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு திறக்கப்படாமல் இருந்தது.
கதவை திறந்து பார்த்தபோது, வீட்டிலேயே லட்சுமணன் இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.