/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளூர் - பனப்பாக்கம் தார்ச்சாலை சேதம்
/
பள்ளூர் - பனப்பாக்கம் தார்ச்சாலை சேதம்
ADDED : செப் 09, 2024 05:26 AM
காஞ்சிபுரம் : ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர்கிராமத்தில் இருந்து,திருமால்பூர் கிராமம் வழியாக, பனப்பாக்கம்கிராமத்திற்கு செல்லும்நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதுபிரதான சாலை.
இந்த சாலையின்வழியாக, பள்ளூர், கணபதிபுரம், காஞ்சிபுரம்,புள்ளலுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு தேவைகளுக்கு திருமால்பூர், பனப்பாக்கம், ஓச்சேரி ஆகிய பகுதிகளுக்கு தினசரி சென்றுவருகின்றனர்.
இச்சாலை, இரு மாதங்களுக்கு முன், குண்டும் குழியுமாக சேதமடைந் இருந்தன.
கடந்த மாத இறுதியில், நெடுஞ் சாலைத் துறையினர் சேத பள்ளங்களில் தார்ஜல்லியை கொட்டிசெப்பணிட்டனர்.
சமீபத்தில் பெய்த மழையால், தார் ஜல்லி கலவை பெயர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக உள்ளன.
இந்த சேதமான தார் சாலையில் வாகனங்கள் செல்லும் போது, விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, ஜல்லி கற்கள் பெயர்ந்த பள்ளூர்- - பனப்பாக்கம் சாலையை, தார் சாலையாக செப்பனிடவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.