/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
100 சதவீதம் ஓட்டளிக்க ஊராட்சி நிர்வாகம் பிரசாரம்
/
100 சதவீதம் ஓட்டளிக்க ஊராட்சி நிர்வாகம் பிரசாரம்
ADDED : ஏப் 05, 2024 09:55 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 37 மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு கட்டுப்பாட்டில் 33 என, மொத்தம், 70 நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இங்குள்ள நெல் துாற்றும் தொழிலாளர் மற்றும் நெல் மூட்டை அடுக்கும் தொழிலாளர்களிடம், தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் மற்றும் ஊராட்சி செயலர் சாந்தி ஆகியோர் துண்டு பிரசுரம் அளித்து, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து காரை, ஈஞ்சம்பாக்கம், கோவிந்தவாடி, சிறுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என, பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

