/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊத்துக்காடு துணை தலைவர் மீது கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் புகார்
/
ஊத்துக்காடு துணை தலைவர் மீது கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் புகார்
ஊத்துக்காடு துணை தலைவர் மீது கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் புகார்
ஊத்துக்காடு துணை தலைவர் மீது கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் புகார்
ADDED : ஆக 20, 2024 05:19 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, 514 பேர், பட்டா, வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு, உதவித்தொகை உள்ளிட்டபல்வேறு வகையிலான கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தையின் தாயார் ஒருவருக்கு, தையல் இயந்திரத்தை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியின் துணை தலைவர் வனஜா லட்சுமணன் என்பவர் மீது, ஊராட்சி தலைவர் சாவித்திரி மற்றும்வார்டு உறுப்பினர்கள் கூட்டாக கலெக்டரிடம் மனு அளித்தனர். 'வளர்ச்சி பணிகளில் குறுக்கீடு செய்வதாகவும், துணை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என, மனு அளித்தனர்.
அதேபோல, உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரணை ஊராட்சிக்குட்பட்ட வயலுார் கிராமத்தில், பல ஆண்டுகளாக வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, கிராம நத்தம் வகைபாட்டில் பட்டா வழங்க வேண்டும் என, அளித்தனர்.