/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் சம பலத்துடன் களம் காணும் கட்சிகள்
/
காஞ்சியில் சம பலத்துடன் களம் காணும் கட்சிகள்
ADDED : மார் 29, 2024 12:13 AM
மாமல்லபுரம், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் மூன்று தி.மு.க., வசம்; கூட்டணி கட்சியான வி.சி.,யிடம் இரண்டு, அ.தி.மு.க.,விடம் ஒன்று உள்ளன.
இத்தேர்தலில் தி.மு.க., சார்பில் செல்வம், அ.தி.மு.க.,வில் ராஜசேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்; இருவருமே இதே தொகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால், பா.ம.க., வேட்பாளர் ஜோதி, திருவள்ளூரைச் சேர்ந்தவர்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பிரசார வேலைகளில் படுபிசியாக உள்ள இவர்கள், தங்கள் கூட்டணியின் பலத்தால் எளிதாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
தொண்டர்கள் பலம், கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., விஜயகாந்த் இறப்பால் அனுதாப ஓட்டுகளை பெற்று வெற்றி பெறுவோம். குறிப்பாக ஆளுங்கட்சி எம்.பி., மீதான மக்களின் அதிருப்தி இருப்பதால், தி.மு.க.,வை வீழ்த்த முடியும் என அ.தி.மு.க.,வினர் நினைக்கின்றனர்.
அதேபோல், இத்தொகுதியில் பா.ம.க.,வின் ஓட்டு வங்கி, பா.ஜ., மீதான மக்களின் ஆர்வத்தை வைத்து ஓட்டுகளை கைப்பற்ற முடியும் என்று பா.ம.க.,வினர் உள்ளனர்.
கூட்டணி கட்சியினர் ஓட்டு வங்கி, மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை முன்னிறுத்தி கட்சியினர் பிரசாரம் செய்வதால், எளிதாக வெற்றி பெறலாம் என தி.மு.க.,வினர் நினைக்கின்றனர்.

