/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிழற்கூரை இன்றி காத்திருக்கும் பயணியர்
/
நிழற்கூரை இன்றி காத்திருக்கும் பயணியர்
ADDED : ஆக 25, 2024 12:55 AM

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது.
இந்த நான்குவழி சாலையை, 654 கோடி ரூபாய் செலவில்,ஆறுவழி சாலையாகவும், 18 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
குறிப்பாக, திருப்பூர், சேலம், பெங்களூரு, ஒசூர், ஆரணி ஆகிய பகுதிகளில் இருந்து, செல்லும் அதிவிரைவு பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்குசெல்லும் பேருந்துகள் பொன்னேரிக்கரை, காரை கூட்டுசாலை கடந்துசெல்கின்றன.
இங்கு, பயணியர் நிழற்கூரை இல்லாததால், பேருந்துகளுக்கு காத்திருக்கும்பயணியர் வெயில்மற்றும் மழையில்காத்திருக்க வேண்டி உள்ளது.
எனவே, காரை கூட்டு சாலையில் பயணியர் நிழற்கூரை அமைக்க வேண்டும் என, பயணியர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.