/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாய் தளம் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
/
மழைநீர் கால்வாய் தளம் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
மழைநீர் கால்வாய் தளம் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
மழைநீர் கால்வாய் தளம் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
ADDED : செப் 14, 2024 07:38 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒ.பி., குளம் தெருவில், சாலையோரம் கான்கிரீட் தளத்துடன் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. சாலையின் தரைமட்டத்தில் உள்ள இக்கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப், குடிநீர் தொட்டி அமைந்துள்ள பகுதியில், சேதமடைந்து கால்வாயில் விழுந்துள்ளது.
இதனால், குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிப்போர் மற்றும் அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, திறந்து கிடக்கும் கால்வாய் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், பெரிய காஞ்சிபுரம் ஒ.பி., குளம் தெருவில், சிமென்ட் சிலாப் உடைந்ததால், திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய் மீது புதிதாக சிமென்ட் சிலாப் போட்டு மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.