/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படூர் சுகாதார நிலையத்தில் மருத்துவர் நியமிக்க கோரி மனு
/
படூர் சுகாதார நிலையத்தில் மருத்துவர் நியமிக்க கோரி மனு
படூர் சுகாதார நிலையத்தில் மருத்துவர் நியமிக்க கோரி மனு
படூர் சுகாதார நிலையத்தில் மருத்துவர் நியமிக்க கோரி மனு
ADDED : மார் 04, 2025 07:12 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சி தலைவர் செல்வக்குமரன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட படூர் கிராமத்தில், பல ஆண்டுகளாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது.
காட்டாங்குளம், ஆனம்பாக்கம், சிறுமையிலுார், மதுார், பழவேரி, திருமுக்கூடல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இங்கு மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த சுகாதார நிலையத்தில், மருத்துவர் மற்றும் மருந்தாளுநர் உள்ளிட்ட பணியாளர்கள் இல்லாததால், வாரத்திற்கு இரண்டு நாட்கள் - விழாயன் , வெள்ளி அன்று மட்டும் மருத்துவர் வந்து செலகின்றனர்.
அன்றைய நாட்களில், மருத்துவர்க்கு மாற்று பணி வழங்கப்பட்டால் வாரம் முழுக்க மருத்துவர் சுகாதார நிலையத்திற்கு வராத சூழல் நிலவுகிறது. இதனால், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
படூர் சுற்றிலும் கிராமங்கள் உள்ளடங்கிய பகுதியாக உள்ளதால், சுகாதாரத்திற்கு மாற்று மருத்துவமனை வசதி இல்லாத நிலை உள்ளது.
எனவே, படூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவும், மருத்துவர் மற்றும் மருந்தாளுநர் காலி பணியிடங்களை நிரப்பவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.