/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெசவாளர்களுக்கு ரொக்கமாக கூலி வழங்க கோரி அமைச்சரிடம் மனு
/
நெசவாளர்களுக்கு ரொக்கமாக கூலி வழங்க கோரி அமைச்சரிடம் மனு
நெசவாளர்களுக்கு ரொக்கமாக கூலி வழங்க கோரி அமைச்சரிடம் மனு
நெசவாளர்களுக்கு ரொக்கமாக கூலி வழங்க கோரி அமைச்சரிடம் மனு
ADDED : மார் 06, 2025 12:17 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், பருத்தி, பட்டு நெசவுக்கான கூலி, சங்க அலுவலகத்தில், நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நெசவாளர்களுக்கு நெசவு செய்ததற்கான கூலியை, நெசவாளர்ளின் வங்கியில் வரவு வைக்க, கைத்தறி துறை அறிவுறுத்தியுள்ளது.
நெசவு கூலியை நெசவாளர்களுக்கு வங்கியில் செலுத்த உள்ளதால், நெசவாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தங்களது நெசவு கூலியை, ரொக்கமாக கையில் கொடுக்க வேண்டும் என, நெசவாளர்கள் மட்டுமல்லாமல், கைத்தறி சங்க நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக, கம்யூனிஸ்ட், - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிகள் கூட்டு குழுவின் சார்பில், கைத்தறி துறை அமைச்சர் காந்தியிடம், நெசவுக்கான கூலியை, நெசவாளர்களிடம் ரொக்கமாக வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை வழங்கினர்.
இதில், பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் பங்கேற்றனர்.