/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ள பாதிப்பை தடுக்க 65 ஏரிகள் இணைக்க திட்டம்
/
வெள்ள பாதிப்பை தடுக்க 65 ஏரிகள் இணைக்க திட்டம்
ADDED : ஏப் 26, 2024 10:57 PM
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, வடிநில பகுதியாக சென்னை உள்ளது. அம்மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு, பகிங்ஹாம் வாயிலாக கடலில் கலக்கிறது. இதனால், சென்னை வெள்ளக்காடாக மாறுவதை தடுப்பது சவாலானது
அ.தி.மு.க., - தி.மு.க., என, இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும், 8,000 கோடி ரூபாய்க்கு மேல், மழைநீர் வடிகால் கட்டமைப்பிற்கு செலவிடப்பட்டு உள்ளது
கூவம், அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலையாறு ஆகியவற்றை துார்வாரும் பணிக்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உள்ளது
இவ்வளவு தொகை செலவிடப்பட்டும், சென்னை மாநகராட்சியில் வெள்ள பாதிப்பிற்கு தீர்வு காண முடியாத நிலை தொடர்கிறது
சென்னையில் 2015 முதல் 2023 வரை சில ஆண்டுகள் வெள்ள பாதிப்பு இருந்தாலும், மற்ற ஆண்டுகளில் வறட்சியே நிலவியது. இதை தவிர்க்க செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு நீர் வரத்து உள்ள 65 ஏரிகள் இணைக்கப்பட உள்ளன
இத்திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. விரிவான திட்ட மதிப்பீடு செய்து, ஆறு மாதங்களுக்குள் பணிகள் துவக்கப்படும்
நிலம் வாங்கி வீடு கட்டுவோர், அந்த பகுதியில் எந்த அளவிற்கு மழைநீர் தேங்கும் என்பதை அறிந்து கொள்ள, கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் எந்தெந்த இடங்களில், எவ்வளவு அளவு மழைநீர் தேங்கியது என்ற விபரங்கள், 'சர்வே' எண்ணுடன் வெளியிடப்படும்
- நமது நிருபர் -

