/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகவதி ஆற்றின் குறுக்கே பாலத்தில் வளர்ந்துள்ள செடிகள்
/
வேகவதி ஆற்றின் குறுக்கே பாலத்தில் வளர்ந்துள்ள செடிகள்
வேகவதி ஆற்றின் குறுக்கே பாலத்தில் வளர்ந்துள்ள செடிகள்
வேகவதி ஆற்றின் குறுக்கே பாலத்தில் வளர்ந்துள்ள செடிகள்
ADDED : ஆக 17, 2024 11:57 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து, வெங்கடாபுரம், குண்டுகுளம், கீழ்கதிர்பூர் வழியாக கீழம்பி செல்லும் புறவழிச்சாலை உள்ளது.
உத்திரமேரூர், வந்தவாசி பகுதியில் இருந்து வேலுார், பெங்களூரு, அரக்கோணம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் செவிலிமேடு புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், கீழம்பி - கீழ்கதிர்பூர் இடையே வேகவதி ஆறு குறுக்கிடும் இடத்தில் பாலம் உள்ளது.
இப்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை பகுதியில் செடிகள் வளர்ந்து வருகின்றன.
இச்செடிகள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில் பாலம் வலுவிழக்கும் சூழல் உள்ளது.
எனவே, கீழம்பி - கீழ்கதிர்பூர் இடையே வேகவதி ஆற்றின் குறுக்கே பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளை வேருடன் அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள ஒவ்வொரு பாலமும் சீரமைத்து வருகிறோம். அதன்படி, காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தின் நீர்வழித்தடம் மற்றும் பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைத்து உள்ளோம்.
அடுத்து உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை பாலாறு பாலத்தையும், கீழம்பி - கீழ்கதிர்பூர் பாலத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

