/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு வல்லம் மக்கள் அவதி
/
பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு வல்லம் மக்கள் அவதி
ADDED : ஆக 04, 2024 01:32 AM

ஸ்ரீபெரும்புதுார்:வல்லம் ஊராட்சிக்குட்பட்ட கைவல்யம் நகர், ஜெமி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. கைவல்யம் நகர் பகுதியில், இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றன.
இங்குள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும், பிளாஸ்டிக் கழிவுகள், குடியிருப்பு பகுதியையொட்டி கொட்டி குவிக்கப்படுகின்றன.
இரவு நேரத்தில் தொழிற்சாலையினரே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், இப்பகுதியினர், சூழ்ந்து, சுவாச கோளாறு மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதி அடைகின்றனர்.
கழிவுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது, மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.