/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குமரகோட்டம் கோவிலில் உழவாரப் பணி
/
குமரகோட்டம் கோவிலில் உழவாரப் பணி
ADDED : ஆக 25, 2024 11:19 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், 2007ல் துவக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளையினர், 17 ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ கோவிலில் சென்று உழவாரப் பணி செய்து வருகின்றனர்.
அதன்படி, 205வது மாத உழவாரப் பணியாக காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று உழவாரப் பணி மேற்கொண்டனர். இதில், கோவில் உட்பிரகாரம், வெளிபிரகாரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
மேலும், நந்தவனம் மற்றும் குளக்கரை பகுதியில் புதர்போல மண்டிக்கிடந்த செடி, கொடிகளை அகற்றினர்.
தீபம் ஏற்றுமிடத்தில் இருந்த எண்ணெய் பிசுக்கு மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தனர்.
கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள விரும்பும் கோவில் நிர்வாகத்தினரும், உழவாரப் பணியில் ஈடுபட்டு தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் 94454 08153, 97512 35808 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

