/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
56 மையங்களில் பிளஸ் 2 தேர்வு துவக்கம் மொழித்தேர்வில் 185 பேர் 'ஆப்சன்ட்'

ADDED : மார் 04, 2025 01:17 AM

காஞ்சிபுரம்,
தமிழகம் முழுதும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. இம்மாதம் 25ம் தேதி வரை நடைபெறும் பிளஸ் 2 தேர்வுக்கான மொழித்தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், கல்வித்துறை, தேர்வுத்துறை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.
முதல் நாள் பொதுத்தேர்வு என்பதால், தேர்வு எவ்வாறு எழுத வேண்டும்.
மாணவ -- மாணவியர் தேர்வு அறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாவட்டத்தில் உள்ள 56 தேர்வு மையங்களிலும், முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர்.
இந்த தேர்வு மையங்களுக்கு, 56 முதன்மை காப்பாளர்கள், 80 பறக்கும் படையினர், பிளஸ் 2 தேர்வு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 107 பள்ளிகளைச் சேர்ந்த, 6,617 மாணவர்களும், 7,310 மாணவியர் என, 13,927 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகினர்.
இதில் 185 மாணவர்கள் நேற்று மொழித்தேர்வில் 'ஆப்சன்ட்' ஆகினர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியர் அறைக்கு சென்று பார்வையிட்டார்.