/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டு எண்ணும் மையம் முன்னேற்பாடு தேர்தல் பார்வையாளர் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையம் முன்னேற்பாடு தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையம் முன்னேற்பாடு தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையம் முன்னேற்பாடு தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ADDED : ஏப் 18, 2024 10:43 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையத்தில், உயர் ரக பாதுகாப்பு அறைகள், ஓட்டு எண்ணும் அறை, கட்டுப்பாட்டு அறை போன்றவை தீவிரமாக அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை, காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர் பூபேந்திர சவுத்ரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, கீழம்பியில் உள்ள தனியார் கல்லுாரியில் இருந்து, ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
இதையடுத்து, சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பசுமை ஓட்டுச்சாவடியும், செவிலிமேட்டில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஓட்டுச்சாவடியையும் அவர் பார்வையிட்டு, அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, எஸ்.பி., சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், பயிற்சி கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் இருந்தனர்.

