/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளிக்கு புது கட்டடம் கட்ட பூஜை மாணவர்கள், பெற்றோர் நிம்மதி
/
பள்ளிக்கு புது கட்டடம் கட்ட பூஜை மாணவர்கள், பெற்றோர் நிம்மதி
பள்ளிக்கு புது கட்டடம் கட்ட பூஜை மாணவர்கள், பெற்றோர் நிம்மதி
பள்ளிக்கு புது கட்டடம் கட்ட பூஜை மாணவர்கள், பெற்றோர் நிம்மதி
ADDED : ஜூன் 28, 2024 11:09 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி கட்டடம், அப்பகுதியில் உள்ள சின்னவேப்பங்குளக்கரையைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக அமைந்துள்ளது.
இதனால் ஆய்வகம், சத்துணவுக் கூடம் போன்ற அறைகளுக்கு செல்ல, சாலையை கடந்தும், குளத்தைச் சுற்றியும் மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இப்பள்ளிக்கு ஒரே வளாகத்தில் பள்ளி கட்டடம் அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், திருக்காலிமேடு குறுக்கு கவரைத் தெருவில், இடம் தேர்வு செய்யப்பட்டு, இரண்டு அடுக்கு மாடியுடன், 12 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டடம், சமையல் அறை, ஆய்வகம், மாணவ - மாணவியருக்கு தனித்தனியாகக் கழிப்பறை என, புதிய கட்டடம், 'யமஹா மோட்டார்ஸ்' நிறுவனம் சார்பில் கட்டப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி துணை மேயர் குமருகுருநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர், யமஹா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.